பிரான்ஸ் செல்ல முற்பட்டவர்கள் இன்று இலங்கைக்கு

9 0

சட்டவிரோதமான முறையில் பிரான்ஸிற்கு சொந்தமான ரியூனியன் தீவுக்கு பயணித்த இலங்கையர்கள் இன்றைய தினம் நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.

சிலாபம் கடற்பகுதியில் இருந்து நீண்டதூர மீன் பிடி படகில் ரியூனியன் தீவுக்கு பயணித்த குறித்த நபர்கள் விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற நீண்டதூர மீன் பிடி படகில் 70 இலங்கையர்கள் ரியூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக சென்றுள்ளனர்.

இது சம்பந்தமாக அந்த நாட்டு அதிகாரிகள் இலங்கைக்கு அறிவித்துள்ளதாக கடற்றொழில் திணைக்களம் கூறியுள்ளது.

குறித்த குழுவில் 08 பெண்களும், 05 சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் படகு சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு சொந்தமானது என்பதுடன், தனது அனுமதியின்றி இந்த ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக உரிமையாளர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Related Post

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 6165 முறைப்பாடுகள்

Posted by - September 8, 2017 0
இந்த ஆண்டின் கடந்த காலத்திற்குள் 6165 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது. அவற்று 90 வீதமான முறைப்பாடுகள் கிடைத்திருப்பது 1929 என்ற அவசர தொலைபேசி…

அர்ஜுன் மஹேந்திரனை இலங்கைக்கு அழைத்துவரவே முடியாது- பிரதிபா மஹாநாம

Posted by - March 20, 2018 0
மத்திய வங்கி பிணை முறி மோசடியின் பிரதான சூத்திரதாரியான அர்ஜுன் மஹேந்திரனை இந்நாட்டுக்கு கொண்டுவர முடியவே முடியாது என சிரேஷ்ட சட்டத்தரணியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான பிரதிபா…

இலங்கையர் டெல்லி விமான நிலையத்தில் கைது 

Posted by - August 2, 2017 0
போலி விமானச் சீட்டை பயன்படுத்தியதாக தெரிவித்து, இலங்கையர் ஒருவர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமது தாயாரை வழியனுப்ப வந்த நிலையிலேயே அவர் இவ்வாறு…

இந்த ஆண்டு முதல் GMP சான்றிதழ் கட்டாயம்

Posted by - February 19, 2017 0
உணவு தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்கள், சுகாதாரத்துக்கு பாதுகாப்பான முறையில் உணவு தயாரிக்கப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்தும் ஜீ.எம்.பி. சான்றிதழை இந்த ஆண்டு முதல் பெற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக…

பாதாள உலக குழுக்களை ஒடுக்க அதிரடி நடவடிக்கை

Posted by - August 21, 2017 0
நாட்டில் பர­வ­ல­டைந்­துள்ள பாதாள உலக நட­வ­டிக்­கை­களைக் கட்­டுப்­ப­டுத்­தவும், பாதாள              உல­கத்தை ஒடுக்­கவும் விசேட அதி­ரடிப்படையில் 1000 பேர் கொண்ட…