தனமல்வில பகுதியில் துப்பாக்கி சூடு,ஒருவர் பலி

5 0

இரு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் துப்பாக்கியினால் சரமாரியாக பிரயோகம் செய்ததினால் ஒருவர் பலியானதுடன் மேலுமொருவர் ஆபத்தான நிலையில் தனமல்விலை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குற்படுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தனமல்விலை பகுதியின் போகாஹன்திய என்ற இடத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்ட நால்வரும் இனந்தெரியாதவர்களென்றும் அவர்கள் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டுவிட்டு அம் மோட்டார் சைக்கிள்களிலேயே தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களைக் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தனமல்விலைப் பொலிசார் தெரிவித்தனர்.

இனந்தெரியாதவர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தினால் பலியானவர் இரு கொலைகளின் பிரதான சந்தேக நபரென்றும் கொலைக்குற்றச்சாட்டப்பட்ட இவர் பிணையில் விடப்பட்டிருந்த  42 வயது நிரம்பிய மூன்று பிள்ளைகளின் தந்தையாவாரென்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

துப்பாக்கிப் பிரயோகத்தினால் பலியான நபர் குறித்த ஸ்தல மஜிஸ்ரேட் நீதிபதி விசாரணைகளை வெள்ளவாயா மஜிஸ்ரேட் நீதிபதி மாலினி தென்னக்கோன் மேற்கொண்டு சட்ட வைத்திய பரிசோதனைக்கென்று சடலத்தை மொனராகலை அரசினர் மருத்துவமனை பிரேத அறைக்கு அனுப்புமாறு நீதிபதி பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

மேற்படி துப்பாக்கிப் பிரயோகத்தினால் படுகாயமுற்ற தனமல்விலையைச் சேர்ந்த 22 வயது நிரம்பிய நபர் தொடர்ந்தும் தீவிரி சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து  தனமல்விலைப் பொலிசார் தொடர்ந்தும் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன்,கொலையாலிகளைத் தேடும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

Related Post

பேராதனைப் பல்கலைக்கழக பீடங்களின் கல்வி நடவடிக்கை 13 ஆம் திகதி ஆரம்பம்

Posted by - August 11, 2018 0
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தற்பொழுது மூடப்பட்டுள்ள அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்த அறிவித்துள்ளார். இருப்பினும், பொறியியல் பீடத்துக்கான…

மஹிந்த பாராளுமன்றத்தில் கூறுவது வேறு விகாரையில் கூறுவது வேறு!

Posted by - January 12, 2019 0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலமைப்பு திருத்தம் சம்பந்தமாக விஹாரைகளில் கூறும் கருத்துக்களுக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தையே பாராளுமன்றில் கூறுவதாக தபால் மற்றும் முஸ்லிம் கலாச்சார அலுவல்கள்…

மோடி உள்ளிட்ட தலைவர்களை நாளை மஹிந்த சந்திக்கும் சாத்தியம் – கப்ரால்

Posted by - September 11, 2018 0
இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாளை இந்திய பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக விஜயத்தில் பங்குபற்றியுள்ள  மத்திய வங்கியின் முன்னாள்…

திடீரென தீ பற்றி எரிந்த வாகனம்

Posted by - September 2, 2016 0
திருகோணமலை கந்தளாயில் கொள்கலன் வாகனமொன்று வீதியின் நடுவே திடீரென தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் போது சாரதியும், அதன் உதவியாளரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்திய வங்கி நிதி மோசடி அறிக்கை கிடைத்தவுடன் தகுந்த தண்டனை – ஸ்ரீ ல.சு.க.

Posted by - December 24, 2017 0
மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தகுந்த தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்பர் என ஸ்ரீ ல.சு.க.யின் சிரேஷ்ட…