புத்தளம் – சிலாபம் தனியார் பஸ் ஊழியர்கள் பகிஷ்கரிப்பில்…….

69 0

சிலாபம் முதல் புத்தளம் வரை சேவையில் ஈடுபடும் சகல தனியார் பஸ் ஊரியர்களும் இன்று (11) இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

சிலாபம் – புத்தளம் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களில் கடமைபுரியும் மூன்று ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை (10) நண்பகல் சிலாபம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதனை கண்டித்தே சிலாபம் – புத்தளம் சேவையில் ஈடுபடும் குறித்த தனியார் பஸ் ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை (10) மாலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

எனினும், புத்தளம் – கொழும்பு , புத்தளம் – குருநாகல், புத்தளம் – கற்பிட்டி ஆகிய பகுதிகளுக்கான தனியார் பஸ் சேவைகள் வழமை போன்று இடம்பெற்றதுடன், இ.போ.ச சொந்தமான பஸ் புத்தளம் – சிலாபம் குறுந்தூர சேவையில் ஈடுபட்டன. 

கடந்த 6 ஆம் திகதி சிலாபம் – நீர்கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் நடத்துனர் ஒருவர் பொலிஸாரினால் தாக்கப்பட்டிருந்தார். 

இதனை கண்டித்து சனிக்கிழமை சிலாபம் – நீர்கொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பஸ் ஊழியர்களும் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். 

இந்த நிலையில், சனிக்கிழமை (09) கொழும்பிலிருந்து புல்மோட்டை வரை சேவையில் ஈடுபட்ட இ.போ.ச நடத்துனர் ஒருவர் மீது சிலாபம் நகரில் குழுவொன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டது. 

குறித்த இ.போ.ச பஸ் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியதாக ௯றப்படும் மூவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் நேற்று நண்பகல் சிலாபம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். 

சிலாபம் – புத்தளம் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஊழியர்கள் மூவரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக ௯றப்படுகிறது. 

Leave a comment

Your email address will not be published.