ஐக்கிய தேசிய கட்சிக்கு 6 புதிய அமைப்பாளர்கள்

30 0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் அமைப்பாளர்கள் இருவர் உள்ளிட்ட 6 பேர் ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி முன்னாள் சுகாதர சேவை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரநாயக தொகுதி அமைப்பாளராகவும் இருந்த லலித் திசாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் அரநாயக தொகுதி அமைப்பாளராகவும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செங்கடகல தொகுதி அமைப்பாளராகவும் இருந்த திலின பண்டார தென்னகோன் ஐக்கிய தேசிய கட்சியின் பாததும்பர தொகுதியின் அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பாராளுமன்ற உறுப்பின்னர் காவிந்த ஜயவர்தன நீர்கொழும்பு தொகுதி அமைப்பாளராகவும் பிரபல பாடகர் ரூகாந்த குணதிலக தம்பதெனிய தொகுதி அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை மஞ்சுளா பண்டார வாரியபொல தொகுதி அமைப்பாளராகவும் உதய விஜேநாயக கிரியால தொகுதி அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ் காரியவசம், அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, மலிக் சமரவிக்ரம ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.