ஜனாதிபதி மைத்திரியே ஜனநாயக விரோதி – ஜே.வி.பி

19 0

ஜனநாயகம், சட்ட ஒழுக்கம்  குறித்து பேசும் ஜனாதிபதியே அரசியல் அமைப்பினை மீறிய வகையில் ஜனநாயக விரோத ஆட்சியை கொண்டு நடத்திச் செல்கிறார் என குற்றஞ்சாட்டிய மக்கள் விடுதலை முன்னணி, அரசியல் அமைப்பினை மீறி பாராளுமன்றத்தை கலைத்தபோதே அவருக்கு எதிரான குற்றப்பிரேரணை கொண்டுவந்து அவரை பதவி நீக்கியிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் அரசியல் நகர்வுகள் மற்றும் தேர்தல்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர், 

பிரதான இரண்டு கட்சிகளும் இந்த நாட்டினை நாசமாக்கி இலங்கையின் அடையாளத்தை அழிக்கும் நடவடிக்கைகளையே முன்னெடுத்துள்ளனர். தேசிய அரசாங்கம்  ஒன்றினை அமைத்ததன் நோக்கத்தினை பிரதான இரண்டு தலைவர்களும் கைவிட்டு தமது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக மட்டுமே செயற்பட்டு வருகின்றனர். 

எனவே அரசியல் குழப்பங்களை சரிசெய்ய வேண்டுமென்றால் பொதுத் தேர்தல் ஒன்றினை நடத்துவதே தீர்வாக அமையும் என்றார்.

Related Post

அதிவேக வீதியில் விபத்து – இரு இளைஞர்கள் பலி

Posted by - December 31, 2016 0
அதிவேக வீதியின் காலி – பின்னதுவ வௌியேறும் பகுதியின் நுகதுவ சமிங்ஞை கட்டமைப்புக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

திக்வெல்ல வாகன விபத்தில் மூவர் பலி

Posted by - September 27, 2017 0
திக்வெல்ல பொல்கஹமுல்ல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திஸ்ஸமஹாராம பகுதியிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து…

பெற்றோரின் நச்சரிப்பினால் விபரீதம்; 17 வயது மாணவன் பரிதாபமாக பலி

Posted by - October 11, 2017 0
பரீட்சையை முன்னிட்டு வீட்டில் கொடுக்கப்பட்ட அதீத அழுத்தத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காலியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

அரநாயக்கவில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - March 19, 2017 0
அரநாயக்க கல்பொக்க பிரதேசத்திலிருந்து சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அரநாயக்க பொலிஸாருக்குக் கிடைத்த தகவலொன்றின் பேரில், இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்…

மீண்டும் அதிகரிக்கிறது முச்சக்கரவண்டி பயணக்கட்டணம்!

Posted by - October 13, 2018 0
முச்சக்கரவண்டிகளின் பயணக்கட்டணத்தை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் அதிகரிக்கவுள்ளதாக முச்சக்கரவண்டி சாரதிகளின் சங்கம்

Leave a comment

Your email address will not be published.