2015 – 2018 காலப்பகுதியில் இடம்பெற்ற மோசடிகள் – முறைப்பாடுகளை ஏற்க தயாராகும் ஆணைக்குழு

324 0

2015 ஜனவரி 14ஆம் திகதி தொடக்கம் 2018 டிசம்பர் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் மோசடிகள் பற்றி ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு முறைப்பாடுகளைப் பொறுப்பேற்க ஆரம்பித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கருதப்படும் ஊழல் செயற்பாடுகள், மோசடிகள், குற்றவியல் அடிப்படையிலான நம்பிக்கை மோசடிகள், சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்தல், ஏமாற்றுதல், அரச வளங்கள் மற்றும் சிறப்புரிமைகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்தல் போன்றவற்றின் பெறுபேறாக அரச சொத்துக்களுக்கு, அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நியதிச்சபை உத்தியோகத்தர்களாகவும் பணியாற்றிய மற்றும் தொடர்ந்து சேவையில் ஈடுபட்டுள்ள ஆட்களுக்கு எதிராக பொதுமக்களின் முறைப்பாடுகள், தகவல்களைக் கோருதல் இந்த ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a comment