தலவாக்கல கட்டுகலை தோட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் மரணித்துள்ளார் மலையக பகுதியில் மேலும் இவ்வாறான சம்பவங்கள் அதிகளவு இடம் பெற வாய்புண்டு என தோட்ட தொழிற்சங்க உத்தியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு வருடத்திற்குள் சுமார் 1000ற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் குளவி கொட்டிற்கு இலக்காகியுள்ளனர்.அதிலும் பலர் மரணித்துள்ளனர். இருந்தபோதிலும் இது விடயம் தொடர்பாக தோட்ட கம்பனிகளோ, அல்லது அரசாங்கமோ எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை நட்டஈடும் வழங்கவில்லை. அத்தோடு குளவி கொட்டிற்கு இலக்காகுவதை தடுக்கும்
முயற்சியிலும் ஈடுபடவில்லை என்று தோட்ட தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு குளவி கொட்டிற்கு இலக்கானவர்களில் அதிகமானோர் கர்பிணிதாய்மார்கள் மற்றும் நோய்வாய்பட்ட தொழிலாளர்களேயாவர் என வைத்தியசாலை வட்டாரங்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களின் படி பெருந்தோட்ட தொழிற்சங்க வாதிகள் தெரிவிக்கின்றனர்.


