துப்பாக்கிகளுடன் மூன்று பேர் கைது!

223 0

மாத்தறை பிரதேசத்தில் இரண்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், மாத்தறை வலய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

உள்நாட்டு துப்பாக்கிகள் இரண்டும் துப்பாக்கி பாகங்கள் சிலவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

குறித்த சந்தேகநபர்கள் பெலியத்தை, பாலடுவ மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சந்தேகநபர்கள்  மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். 

Leave a comment