ராட்டினம் உடைந்த வீழ்ந்து தாய் பலி, மகள் படுகாயம்

6479 0

வெயங்கொடை – நைவல  பகுதியில் அமைந்துள்ள  பூங்காவின்  ராட்டினம்  உடைந்த வீழ்ந்ததில்  பெண்ணெருவர்  உயிரிழந்துள்ளதாக பொலிசார்  தெரிவித்தனர்.  

இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் தாயும், மகளும் படுகாயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது சிகிச்சை பலனின்றி 45 வயதுடைய் தாய் உயிரிழந்ததுடன், அவரது 13 வயதுடைய மகள் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம்  பிரேத பரிசோதனைகளக்காக கம்பஹா வைத்திய சாலையின் வைக்கப்பட்டுள்ளதுடன்,  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  வெயங்கொடை  பொலிசார் மேற்கொண்ட வருகின்றனர்.  

Leave a comment