சுதந்திர கட்சியினால் இன்றைய நிலையில் ஒருபோதும் தனித்து செயற்பட முடியாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சேஹான் , பொதுஜன பெரமுன முன்னணியுடன் கூட்டணியமைக்காது தனித்து செயற்படுவது ஐக்கிய தேசிய கட்சிக்கு பலமாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் பொதுஜன பெரமுன முன்னணியினர் சுதந்திரக் கட்சியுடன் கூட்டணியமைத்தோ, தனித்தோ, ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்பட தயாராகவே உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது கூட்டணி உருவாக கூடாது என்று இரண்டு தரப்பிலும் காணப்படுகின்ற வாதப்பிரதிவாதங்கள் தொடர்பில் வினவிய பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


