புதையல் தோண்டிய ஒருவர் பொலிஸாரினால் கைது

622 0

வவுனியா பூவரசங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினை அடுத்து வவுனியா செக்கட்டிப்புலவு, குஞ்சுக்குளம் வயல் வெளியில் புதையல் தோண்டிய 38 வயதான குளியாப்பிட்டியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய கில்ட்டி, மின்பிறப்பாக்கி, கிடங்கு கிண்ட பயன்படும் பொருட்கள். மண் அகழ்வதற்கான உபகரணங்கள் என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை இப்புதையல் தோண்டிய ஏனைய ஏழு பேர் பொலிஸாரின் சுற்றிவழைப்பில் தப்பித்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பூவரசங்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Leave a comment