2 வது நாளாகவும் தொடரும் சத்தியாகிரக போராட்டம்

328 0

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைக் வழங்கக்கோரி டிக்கோயா சலங்கந்தை பகுதியை சேர்ந்த சிவனு கணேசன் என்பவர் இரண்டாவது நாளாக இன்றும் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் பாராமுகமாக செயற்படாமல் உடனடியாக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும், கொழும்பில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மலையக இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் குறித்த நபர் மேற்படி சத்தியாகிரக போராட்டத்தை நேற்று ஆரம்பித்தார்.

ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளமாக வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்திய தொழிற்சங்கங்கள் இன்று 700 ரூபாய்க்கு கையொப்பம் இடுவதற்கு தயாராகுவதாகவும் அதற்கு தான் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு நாளை தொழிலாளர்கள் அனைவரும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்பதோடு, கறுப்பு பட்டிகளை அணிந்து கொண்டு தொழிலுக்கு செல்ல வேண்டும் எனவும் இவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a comment