ஜே.வி.பி, ஊழல்வாதிகளுடனும் குற்றவாளிகளுடனும் ஒருபோதும் கைகோர்ததில்லை – நளிந்த

4606 19

மக்கள் விடுதலை முன்னணியினரை கூட்டணியமைக்குமாறு  பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமைத்துவம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தால் விடுத்தால் அதற்கு தகுந்த  பதிலை வழங்கவுள்ளதாக அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்  நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன முன்னணி அமைக்கவுள்ள புதிய கூட்டணியில் மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்துக் கொள்ளுமாறு அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ள விடயம் தொடர்பில் வினவிய பொழுதே அவர்  மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்துரைத்த அவர்,

பொதுஜன பெரமுன முன்னணியினர் முதலில் தாங்கள் எக்கட்சி உறுப்பினர்கள் என்பதை முறையாக நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அதன் பின்னரே  பிற கட்சியினரை தங்களுடன்   கூட்டணியமைத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்க வேண்டும்.   

அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியினர் பல  சவாலான நிலைகளிலும் எவருடனும் கூட்டணியமைத்துக் கொள்ளாது தனித்தே அரசியலில் செல்வாக்கு செலுத்தியது. இதுரையில் நாங்கள் ஊழல்வாதிகளுடனும்,  குற்றவாளிகளுடனும் கைகோர்த்ததில்லை என்றார்.

Leave a comment