இருவேறு விபத்தில் இருவர் பலி

35913 6,611

ஹொரண – கொழும்பு பிரதான வீதியின் ஹல்பிட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கோனபல பகுதியை சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இதேவேளை பிபில – மஹியங்கன 5 ஆம் கட்டை பகுதியில் கெப் வாகனம் ஒன்று துவிச்சக்கர வண்டி ஒன்றை மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

வேகம பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் கெப் வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a comment