நீரில் மூழ்கி ஒருவர் பலி

360 0

சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிலாபம் கடற்பகுதியில் நீராட நபர் நீரில் இழத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். 

நேற்று (26) மாலை 6 மணியளவில் குறித்த கடற்பகுதியில் நீராட சென்ற மூவர் நீரில் இழந்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அதில் இருவரை மீட்டு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

அத்துடன் மற்றுமொரு நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மாத்தளை பகுதியை சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

காணாமல் போன நபரை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment