பொழுது போக்குக்காக நீராடச் சென்ற இளைஞர்களில் ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி

366 0

இளைஞர்கள் மூவர் சேர்ந்து பொழுது போக்குக்காகச் சென்று ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தபோது அம்மூவரில் ஒருவர் நீரில் மூழ்கி மரணித்துள்ளதாக பொலிஸார் தெரித்தனர்.

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காலையடிக்குளம், கைலிமடு ஆற்றில் நீராடியபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காத்தான்குடி 6, டொக்டர் அஹமட் பரீட் மாவத்தை, நாகையடி அவுலியா வீதியைச் சேர்ந்த முஹம்மது ஜாபிர் அப்துல்லாஹ் (வயது 17) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் வவுணதீவுப் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Leave a comment