மஹிந்தவின் மகனின் திருமண நிகழ்வில் ரணில் விக்கிரமசிங்க ..!

365 12

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ஷவின் திருமண நிகழ்வில் விசேட அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டுள்ளார்.

தனது மகனின் திருமணத்திற்கு வருகைத் தருமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையிலேயே பிரதமர் இன்று திருமண நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். 

ரோஹித ராஜபக்ஷ அவரது நீண்ட கால காதலியான டட்யான லீ ஆகியோர் இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப கிராமமான வீரக்கெட்டியவில் மிகவும் எளிமையான முறையில் திருமண நிகழ்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

Leave a comment