நல்லிணக்கத்திற்காக குரல்கொடுத்த ஞானசார தேரரை விடுவிப்பதில் தவறில்லை -சுதந்திரக் கட்சி

193 0

இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை விடுவிப்பதில் எவ்வித தவறில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கலகொட அத்தே ஞானசார தேரர் பாரியதொரு குற்றத்தைப் புரிந்தவர் அல்ல. அவர் நாட்டுக்காகவும், இராணுவ வீரர்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளாரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னர் ஞானசார தேரரை விடுவிக்கும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி துமிந்த திஸாநாயக்க வெளியிட்டுள்ள கருத்துத் தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment