விடுதலைப் புலிகள் அமைப்பினர் சிறந்தவர்கள் எனக் குறிப்பிட்டு, அவர்களின் பொருட்டு வெளிப்படையாகவே ஆதரவை வெளியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருவது கவலைக்குரிய விடயமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் ஒன்றின் ஊடாக தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையினைத் தீர்க்க முடியாது. தற்போதைய நிலையில் பாராளுமன்றத் தேர்தல் ஒன்றே நாட்டிற்கு அவசியமாகும். பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் அஞ்சுகின்றது எனின், மாகாணசபைத் தேர்தலை நடத்துங்கள் எனவும் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


