சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்ஸர்லாந்தின் Adlikon – Regensdorf பகுதியில் நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றதாக சுவிட்ஸர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பெண் செலுத்தி வந்த கார் கனரக வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் சர்வாணி சுரேஸ்குமார் 43 வயதுடைய பெண் ஒருவரே உயிரிந்துள்ளார்.
அத்துடன், 22 வயதான கனரக வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்ஸர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் சூரிச் றேகன்ஸ்டோர்ப் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து சுவிட்ஸர்லாந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



