வாய்திறக்கப்போவதில்லை – சரத் அமுனுகம

353 0

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதா இல்லையா என்பதை முதலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கும் வரையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாற்று வேட்பாளர் குறித்து வாய் திறக்கப்போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.  

முதலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யாரென தெரிவிக்க வேண்டும்.  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் பிளவுகள் இருப்பதை வெளிக்காட்டுவதற்கு அவசியம் இல்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவுகள் இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக தாம் மாற்று ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தேடுவதாக பல்வேறு  கருத்துக்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் நிலவுகின்ற நிலையில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகமவிடம் இது குறித்து வினவிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

Leave a comment