மீண்டும் கலஹா வைத்தியசாலை

253 0

ஐந்து மாதங்களாக மூடப்பட்டிருந்த கலஹா வைத்தியசாலை இன்று (16) மீண்டும் திறக்கப்பட்டது. 

கலஹா பிரதேச வைத்தியசாலை நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளதால் பிரதேச மக்கள் பாரிய இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். 

கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை ஒன்று உயிரிழந்ததை அடுத்து ஏற்பட்ட பதற்றநிலைமை காரணமாக வைத்தியசாலையின் வைத்தியர்கள் விலகிக் கொண்டதையடுத்து வைத்தியசாலை மூடப்பட்டது. 

கலஹா பிரதேசத்தில் 28 கிராமங்களின் 25,000 இற்கும் அதிகமானவர்கள் மருத்துவ சேவைக்காக கலஹா வைத்தியசாலையை நாடுகின்றனர். 

எனினும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து வைத்தியசாலை 05 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. 

இதன்காரணமாக மருத்துவ சேவைக்காக சுமார் 28 கிலோமீற்றர் தூரம் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு பயணிக்க வேண்டியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். 

இவ்வாறு மக்கள் அனுபவிக்கும் சிரமங்கள் தொடர்பில் கடந்த 12 ஆம் திகதி அத தெரண செய்தி நாட்டிற்கு தெளிவுபடுத்தியிருந்தது. 

அதன் பின்னர் மத்திய மாகாண ஆளுனர் மைத்திரி குணரத்ன அன்றை தினம் இரவு கலஹா வைத்தியசாலைக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடியதை அடுத்து இன்று வைத்தியசாலை மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

Leave a comment