மாணவன் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்!

7 0

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை யூனிபீல்ட் பகுதியில் 13.01.2019 அன்று இரவு பத்து மணியளவில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் போது உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

இதன் போது மாணவனின் வீடும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

கடும் காயங்களுக்கு உள்ளான மாணவன் கொட்டகலை பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்றுவரும் செல்லசாமி சிவராஜ் வயது 19 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அதே தொடர்குடியிருப்பில் வசித்து வரும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் தனது தாயுடன் வீட்டில் பஜனை செய்பவர்களுக்கு சாப்பாடு சமைத்து எடுத்து செல்ல முற்பட்ட போது மாணவனுடன் மதுபோதையில் இருந்த நபர் வீண் சண்டைக்கு இழுத்து கூரிய ஆயுதத்தால் தாக்கியதாகவும், குறித்த மாணவனின் தந்தை 20 வருடங்களுக்கு முன் உயிரிழந்துள்ளதாகவும், தாயின் பராமரிப்பிலேயே தாக்கப்பட்ட மாணவன் வாழ்ந்து வருவதாகவும் இந்த சம்பவத்திற்கு பழைய குரோதம் ஒன்றே காரணம் என்றும்  பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இது குறித்து தாய் கருத்து தெரிவிக்கையில், தனது மகன் பஜனை செய்பவர்களுக்கு உணவு சமைத்து விட்டு அதனை எடுத்து செல்ல முற்பட்ட போது மது போதையில் இருந்த நபர் தன்னையும் தாக்கி மகனையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாகவும் தாக்குதல் மேற்கொண்ட நபர் தொடர்ந்தும் தங்களுடன் மது போதையில் சண்டையிடுவதாகவும் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

மைத்­திரி தலை­மை­யி­லான கூட்டு அரசு அடுத்த வெசாக் போயா தினத்துக்குள் முற்­றுப்­பெ­றும்!

Posted by - February 16, 2018 0
சிறிலங்கா ஜனாதிபதி மைத்­திரி தலை­மை­யி­லான கூட்டு அரசு அடுத்த வெசாக் போயா தினத்துக்குள் முற்­றுப்­பெ­றும் என்று முன்­னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தார்.

இந்தியப் பெருங்கடலில் தத்தளித்த 5 சிறிலங்கா மீனவர்களை மீட்டது ஈரானிய எண்ணெய் கப்பல்

Posted by - December 4, 2017 0
படகு கவிழ்ந்த நிலையில் இந்தியப் பெருங்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறிலங்கா மீனவர்கள் ஐந்து பேரை ஈரானிய எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்று காப்பாற்றியுள்ளதாக, இர்னா செய்தி நிறுவனம்…

தவறாக வௌியிட்ட செய்தியை திருத்தவும்; AFP செய்திச் சேவைக்கு கடிதம்

Posted by - March 24, 2017 0
தனது தலைமையில் மரணப்படை ஒன்று செயற்பட்டதாக சர்வதேச ஊடகமான பிரான்ஸ் செய்திச் சேவை (AFP) வௌியிட்ட செய்தி தவறானது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ…

பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனுக்கு எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் அஞ்சலி

Posted by - October 3, 2016 0
மாரடைப்பு காரணமாக உயிரிழந்த வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனுக்கு எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்மந்தன் உள்ளிட்ட அதிதிகள் அஞ்சலி செலுத்தினர்.

பாராளுமன்றத்தில் திரை மறைவில் என்ன நடக்கின்றது என்பது பற்றி மக்கள் விளங்கிக் கொள்ளவேண்டும்-கெஹெலிய

Posted by - November 19, 2018 0
பாராளுமன்றத்தில் திரை மறைவில் என்ன நடக்கின்றது என்பது பற்றி மக்கள் விளங்கிக் கொள்ளவேண்டும், மேன்மைக்குறிய பாராளுமன்ற சம்பிரதாயங்கனை துச்சமென மதித்து நடவடிக்கை எடுக்கும் போது அனைப் பார்த்துக்கொண்டு…

Leave a comment

Your email address will not be published.