மஹிந்த பாராளுமன்றத்தில் கூறுவது வேறு விகாரையில் கூறுவது வேறு!

485 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலமைப்பு திருத்தம் சம்பந்தமாக விஹாரைகளில் கூறும் கருத்துக்களுக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தையே பாராளுமன்றில் கூறுவதாக தபால் மற்றும் முஸ்லிம் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.எம். ஹலீம் கூறியுள்ளார். 

இன்று கண்டி மாவில்மட பிரதேசத்தில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். 

பாராளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக கூடிய சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாகவும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமையும் வழங்கி செயற்படுவதாக மிகவும் தௌிவாக கூறினார். 

இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்குமாறும், மதங்களுக்கு இடையில் பேதம் ஏற்படும் வகையில் செயற்பட கூடாது என்றும் கூறினார். 

அதற்கு பிரதமர் உடன்பட்டதாகவும், பாராளுமன்றத்தில் கூறுவது போன்று அவர் செயற்பட்டால் நாட்டுக்கு மேலும் பலன் கிடைக்கும் என்றும் அமைச்சர் எம்.எச்.எம். ஹலீம் கூறியுள்ளார்.

Leave a comment