வவுனியாவில் டெங்குதாக்கத்தால் கடந்தவருடம் 596 பேர் பாதிப்பு ; இருவர் மரணம்

7 0

வவுனியா மாவட்டத்தில் கடந்த வருடம் 596 டெங்குநோயாளர்கள் இனஞ்காணப்பட்டுள்ளதாக வவுனியா பிராந்திய தொற்றுநோய் தடுப்புபிரிவின் வைத்திய அதிகாரி யூட்பீரிஸ் தெரிவித்தார்.

வவுனியாவில் கடந்த வருடம் டெங்கு நோயின் தாக்கம் தொடர்பாக கேட்ட போதே மேற்படிதெரிவித்தார். 

மேலும் தெரிவித்த அவர்,  

வவுனியா சுகாதாரவைத்திய அதிகாரிபிரிவில் அதிகபட்சமாக 405 நோயாளர்களும், செட்டிகுளம் சுகாதாரவைத்திய அதிகாரிபிரிவில் 107 நோயாளர்களும், வவுனியா வடக்கு  சுகாதாரவைத்திய அதிகாரிபிரிவில்  36 நோயாளர்களும், வவுனியா தெற்கு  சுகாதாரவைத்திய அதிகார பிரிவில்  48 நோயாளர்களும் இனஞ்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் டெங்கு நோய் தாக்கத்தின் மூலம் வவுனியாவை சேர்ந்த இரண்டு பேர் கடந்த வருடம் மரணித்துள்ளனர். ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்திருந்ததுடன், இன்னுமொருவர் யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவுகளிலும் உள்ள பொதுமக்களின் கிணறுகளில் டெங்குநுளம்பை அழிக்கும் மீன்கள் விடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Post

யாழில் 80 கிலோ கஞ்சாவோடு கடத்தல்காரர்கள் இருவர் கைது

Posted by - February 5, 2019 0
யாழ்ப்பாணம், தென்மராட்சியின் எல்லைப்பகுதியில் வைத்து நேற்று இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் 80 கிலோ கஞ்சா பொதிகளை கடத்திச் சென்று கொண்டிருந்த இரண்டு பேரை யாழ்.…

வடக்கு மாகாண வைத்தியர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில்…(காணொளி)

Posted by - March 2, 2017 0
  மாலபே தொழில்நுட்ப மற்றும் மருத்துவத்திற்கான தனியார் கற்கை நிறுவனத்திற்கு எதிராக வடக்கு மாகாண வைத்தியர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 8 மணி தொடக்கம்…

அரசியல் பிரதிநிதிகளுக்கு அடுத்த தேர்தலில் பாடம் புகட்டுவோம்

Posted by - March 1, 2017 0
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் இன்று 3வது நாளாகவும் காரைதீவு விபுலானந்த சதுக்கமருகே தொடர்கின்றது.தமக்கு அரசு லைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

கிளிநொச்சியில் அதிநவீன வசதிகளுடன் மூதாதர் அன்பு இல்லம்

Posted by - April 17, 2017 0
கிளிநொச்சியில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள வசதிகளுடன் கூடிய மூதாதர் அன்பு இல்லம் ஒன்று அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது நேற்றைய தினம் பத்துமணியளவில் கிளிநொச்சி டிப்போசந்திக்கு அருகாமையில் உள்ள…

மாவீரர்கள் நினைவு விழாவில் பங்கேற்க மாவீரர்களின் பெற்றோர்களுக்கு அழைப்பு

Posted by - November 27, 2016 0
தமிழினத்தின் விடிவுக்காக போராடி தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ஒவ்வொரு வருடமும் கார்த்திகை 27ஆம் திகதி தமிழ் மக்களினால் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படுகின்றது.…

Leave a comment

Your email address will not be published.