நாமல் குமாரவுக்கு எதிரான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் அவரால் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பான விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அவரை விசாரணை செய்ய முற்படுவதில் சதித்திட்டங்கள் இருக்கலாம் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாமல் குமாரவினால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் பொலிஸார் முறையான விசாரணைகளை நடத்தி முடியும்வரைக்கும் அவர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வது சாட்சிகளை வலுவிழக்கச்செய்யும் செயலாகும்.
அதனால் நாமல் குமாரவுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி, பொலிஸாரின் அழுத்தங்கள் எதுவும் இல்லாமல் வாழ இடமளிக்கவேண்டும் என்றார்


