ஜனாதிபதி யார் என்பதை மஹிந்த தீர்மானிப்பார்- ரோஹித

192 0

2020 ஆம் ஆண்டு  ஜனாதிபதி  யார்  என்பதை  எதிர்க் கட்சி  தலைவர் மஹிந்த ராஜபக்ஷவே தீர்மானிப்பார்.    ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும்,  பொதுஜன பெரமுனவும் இணைந்து புதிய கூட்டணியமைப்பது தற்போது உறுதியாக்கப்பட்டுள்ளது.  

இரண்டு  கட்சியின்  கொள்கைளையும் முன்னிலைப்படுத்தி  வெற்றிப் பெறுபவரையே ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷ  களமிறக்குவார்.  என பாராளுமன்ற உறுப்பினர்   ரோஹித அபேகுணவர்த  தெரிவித்தார்.

அரசாங்கத்தை எதிர்கட்சியே விமர்சிக்கும். ஆனால் தற்போது நிலைமை  மாறிவிட்டது.  ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தை கட்சியினரே கடுமையாக சாடும் நிலை ஏற்பட்டுள்ளது. நிலையற்ற அரசாங்கம் ஒன்று உருவாகுமாயின் அதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவை முழுமையாக கிடைக்கப் பெற்றிருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுன தலைமை  காரியாலயத்தில்  இன்று  திங்கட்கிழமை இடம் பெற்ற  ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a comment