கொடதெனிய வாகன விபத்தில் மாணவனொருவர் பலி

296 0

கொடதெனியாவ  – நீர்கொழும்பு பிரதான வீதியில்  இடம்பெற்ற  வாகன விபத்தில்  மாணவனொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம்   இன்று காலை 6.15 மணியளவில்  இடம் பெற்றள்ளதுடன். கொடிகமுவ பகுதியிலிருந்து  நீர்கொழும்பு பகுதி நோக்கி பயணித்த வேன் பாதையை விட்டு விலகி  பாதையில் பயணித்த இருவர் மீது மோதி விபத்துக்குள்ளானமையினாலேயே  மேற்படி உயிரிழப்பு சம்பவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

விபத்தில் படுகாயமடைந்த இருவரும் அகரகம வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவன் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர்  11 வயதுடைய  படல்கம பகுதியை சேர்ந்த சிறுவனாவார்.

குறித்த சிறுவன் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன். உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைகளக்காக  அகரகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.  

விபத்தில் படுகாயமடைந்த மற்றைய நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், விபத்துடன் தொடர்புடைய வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இதே வேளை விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடதெனிய பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a comment