க.பொ.த உயர்தர பரீட்சையில் ‘3ஏ’ சித்திகளை பெற்ற மாணவன் திடீர் மரணம்

61 0

கடந்த வாரம் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சையில் அதிசிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன், கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற மாணவன் எனவும்,  திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. 

களுத்துறை, இசுரு உயண பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் உயர்தர மாணவன் பரீட்சை பெறுபேறு வெளியாகுவதற்கு முன்னர் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் வெளியான பெறுபேறுகளுக்கு அமைய உயர்தர பரீட்சையில் 3 ஏ சித்திகளை பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது.

அவரது நினைவாக பெற்றோர் நேற்றைய தினம் இரத்த தான நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்ததுடன், பெற்றோர் குறித்த மாணவனின் இழப்பால் பெரும் மன உலைச்சலிற்கு ஆளாகியுள்ளனர். 

அத்தோடு மாணவனின் இழப்பானது,  பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் , மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a comment

Your email address will not be published.