பொருளாதாரம் கடந்த வருடத்தை விட பல சவால்களை எதிர்கொண்டுள்ளது-இந்திரஜித்

387 0

நாட்டின் பொருளாதாரம் கடந்த வருடத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தது. குறிப்பாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, நாணயமாற்று விகிதத்தின் மீதான அழுத்தங்கள் மற்றும் பூகோள பொருளாதார நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள், நிதியியல் மற்றும் வெளிநாட்டுத்துறையினை மோசமாகப் பாதித்த புவியியல்சார் அரசியல் அபிவிருத்திகள் என்பனவற்றுடன், எமது நாட்டின் அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களும் பல்வேறு சவால்களை ஏற்படுத்தியிருந்தன. நிச்சயமற்ற அரசியல் நிலைமைகள் ஆண்டின் இறுதிக்காலப்பகுதியில் ஒட்டுமொத்த பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டிற்கு பாரிய சவாலாக அமைந்திருந்தது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.

இவ்வருடத்திற்கான நாணய மற்றும் நிதியியல்துறை கொள்கைகள் தொடர்பான இலங்கை மத்திய வங்கியின் 12ஆவது வழிகாட்டலை இன்று புதன்கிழமை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே மத்திய வங்கி ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில், 

தற்போதும் பொருளாதாரத்தின் மீது பல்வேறுபட்ட சவால்களும், அச்சுறுத்தல்களும் நிலவுகின்றன என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அத்தோடு இவற்றால் மேலதிகமாக நேரிடக்கூடிய இடர்கள் பேரண்ட பொருளாதார நிதியியல் முறைமை உறுதிப்பாட்டின் மீது மேலதிக அழுத்தங்களைத் தோற்றுவிக்கலாம். ஆனால் இவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த வருடத்தில் நாங்கள் வகுக்கவுள்ள புதிய திட்டங்கள் மற்றும் கொள்கைகள் ஊடாக நிலைபேறான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையிலான சூழலை அமைப்பதற்கும் முடியும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.

Leave a comment