தவறான வழிநடத்தல்களின் மூலம் முன்னெடுத்த பிழையான தீர்மானங்களினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மக்கள் மத்தியில் கோமாளியாகியுள்ளார். இதன் பின்னரும் தனது தனிப்பட்ட விரோதத்துக்காக செயற்படாமல் அரசியல் அமைப்புக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் மதிப்பளித்து பெரும்பான்மையினை விருப்புக்கு இடமளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அலரிமாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்..

மேலும் சிறந்த கொள்கைகள் உடையவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் உள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் உள்ளவர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவார்களானால் சரியான தகவல்களை பெற்றதன் பின்னர் அவர்களின் கொள்கைளை ஆராயந்தே இணைத்தக்கொள்வோம்.

அவ்வாறே பேரம் போகாதவர்களையே எங்களுடன் இணைத்துக்கொள்வோம். இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திலும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் உள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.