ராஜபக்ஷ தரப்பினரது மேன்முறையீட்டு மனுவும் ஒத்திவைப்பு

289 0

மஹிந்த ராஜபக்ஷ உட்பட முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்களை அந்த பதவியில் கடமையாற்ற விடாது விடுக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு எதிர்வரும் 14ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ உட்பட முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்கள் 17 பேரினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரதிவாதிகளாக ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் 122 உறுப்பினர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment