நல்லதண்ணி வரையிலான பாதை விரிவுப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்

25 0
மோஹினி நீர் வீழ்ச்சியிலிருந்து நல்லதண்ணி வரையிலான பாதை விரிவுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நோர்வூட் வீதி அபிவிருத்திப் பிரிவினால் இந்த பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் புனித சிவனொலிபாத மலை யாத்திரையை முன்னிட்டு யாத்திரிகளின் வசதி கருதி இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இம்மாதம் 22 ஆம் திகதி இவ்வருடத்திற்கான புனித சிவனொலிபாத மலை யாத்திரை ஆரம்பமாகவுள்ளது.

இதற்கு முன்னர் குறித்த வீதியின் புனரமைப்பு நடவடிக்கைகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வீதி அபிவிருத்திப் பிரிவின் நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் கே.டீ.பீ.தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

8 அடி பாதையாக இருந்த குறித்த வீதியை இரு வழிப்பதையாக விரிவுபடுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் இரண்டு வாகனங்களுக்கு அங்கு இலகுவில் பயணிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.