முன்னாள் போராளிகள் அச்ச நிலையில் உள்ளனர்!- சிவமோகன்

26 0

முன்னாள் போராளிகளை மீண்டும் ஒரு அச்ச நிலையை நோக்கி நகர்த்தும் நிகழ்ச்சி நிரலாக வே பார்க்கின்றேன்.வன்னி  மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இன்று வவுனியாவில் வன்னி  பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் பிரத்தியேக காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பில் முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலமை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் போராளிகளை மீண்டும் ஒரு அச்ச நிலையை நோக்கி நகர்த்தும் நிகழ்ச்சி நிரலாகவே பார்க்கின்றேன். இதைத்தான் நான் கூறியிருக்கின்றேன் சர்வதேசத்திலிருந்து எங்களது போராட்ட தமிழர்களின் விடுதலை நோக்கிய பயணத்தில் இடையூறுகளை ஏற்படுத்துவதற்காக சிலர் செயல்படுகிறார்களோ என்று என்னுடைய அச்சத்தை தெரிவித்திருந்தேன். பலர் பணத்தை வெளியிலே இருந்து கொடுத்து அவரவர் இடத்தில் சில நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தியிருந்தார்கள்.

இவை அனைத்தும் அலசி ஆராயப்பட வேண்டியவை.  தங்களிடையே ஒரு சுமுகமான நிலையில் வாழும் ஒரு போராளிகளை இன்று ஒரு அச்ச நிலைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பது வெளிப்படையான உண்மை. அந்த விடயத்தை முன்னெடுப்பவர்கள் உடனடியாக நடவடிக்கைகளை கைவிட வேண்டும். என்பதையே நான் கூறிக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related Post

சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்த ஐவர் கைது

Posted by - August 18, 2018 0
கிளிநொச்சி – இரணைமடு குளத்தில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பயன்படுத்திய தங்கூசி வலைகளும் மீட்கப்பட்டுள்ளது. நாட்டில் தங்கூசி வலைகளின் பயன்பாடு…

வடமாகாண மகளீர் புனர்வாழ்வு அமைச்சு வெறும் பெயரளவிலே – அனந்தி குற்றச்சாட்டு

Posted by - October 9, 2017 0
வடமாகாண மகளீர் புனர்வாழ்வு அமைச்சிற்கான நிதிகள் மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடமாகாண மகளீர் அமைச்சர் அனந்தி சசிதரன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமது…

இலங்கை அரசாங்கத்தின் கடற்றொழில் திருத்தச் சட்டத்துக்கு தமிழக முதலமைச்சர் எதிர்ப்பு

Posted by - July 8, 2017 0
இலங்கை அரசாங்கத்தின் கடற்றொழில் திருத்தச் சட்டத்துக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர்…

வடக்கு மாகாண சபை வரவு – செலவு திட்டம் இன்று

Posted by - November 24, 2016 0
வடக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வில், வடக்கு அரசின் அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் நிதிக் கூற்று அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. வரவு – செலவுத்திட்ட…

குப்பைமேட்டுச் சரிவினால் 10 பேர் பலி

Posted by - April 15, 2017 0
கொழும்பு மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற குப்பைமேட்டுச் சரிவினால் 10 பேர் மரணித்ததாக வெள்ளம்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் இரண்டு சிறுமிகள் உட்பட்ட 6 பெண்களும் இரண்டு…

Leave a comment

Your email address will not be published.