ஜனாதிபதி ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
நீதிமன்ற விசாரணைகள் முடியும் வரையில் பாரிய நடவடிக்கைகள் எதற்கும் செல்லத் தேவையில்லையென தமது சட்டத்தரணிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். நீதிமன்ற செயற்பாடுகள் முடிவடைந்ததன் பின்னர் ஜனாதிபதியின் அதிகாரத்தை விடவும் மக்களின் பலம் அதிகம் என்பதை நாம் காட்டுவோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

