ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவிற்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணையை கொண்டுவருவதே தற்போதைய அரசியல் நெருக்கடிக்கான ஒரே தீர்வு என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரையின் பின்னர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாட்டில் பல மணிநேரமாக சிறிசேன மேற்கொண்ட வாய்வீச்சுகள் அவர் நாட்டை ஆள்வதற்கு தகுதியற்றவர் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளன என மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.
அவர் ஆவேசமாக உரத்தகுரலில் சீற்றத்துடன் ஆற்றிய உரையில் பொய்களும் திரிபுபடுத்தல்களும் உணர்ச்சிவாதமும் பக்கச்சார்புமே காணப்பட்டன என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு தற்போதுள்ள ஒரேயொருவழி அரசியல் குற்றவியல் பிரேரணையே என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

