மர்மான முறையில் உயிரிழந்த ஆணின் சடலம் மீட்பு!

8458 13

வெயாங்கொட கொடவெல பகுதியில் வயல்வெளியிருந்து ஆண் ஒருவரது சடலத்தை மீட்டுள்ளதாக வெயாங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

63 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற அத்தனகல்ல மேலதிக நீதவான் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதியிலிருந்து குறித்த நபரின் கைப்பையும் தொலைப்பேசி ஒன்றையும் மீட்டுள்ள பொலிஸார் சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment