சாந்தசோலை 50 வீட்டுத்திட்டம் பகுதியில் நேற்று அரச ஊழியர் ஒருவரின் வீடு மின் ஒழுக்கினால் எரிந்து பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

வீட்டில் பிரதான சாமி அறையில் சாமிப்படத்திற்கு பொருத்தப்பட்ட மின் குமிழ் பகுதியிலிருந்து மின்சாரம் ஒழுக்கு ஏற்பட்டு சாமி அறையிலிருந்த படங்கள், பொருட்கள், அலுமாரி, வெளியே வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டி,   என சுமார் மூன்று இலட்சத்தி ஜம்பதினாயிரம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் எரிந்து நாசகமாகியுள்ளது..

அத்துடன் வீட்டின் கட்டிடத்திற்கும் கூரைத்தகடுகள் என்பனவும் பலத்த சேதமடைந்துள்ளது வீட்டினை புனர் நிர்மானம் செய்வதற்கு ஒரு இலட்சத்து ஜம்பதினாயிரம் ரூபா செலவாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக வீட்டின் குடும்பத்தலைவியான நெடுங்கேணி பிரதேச செயலகத்தின் பணியாற்றும் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

சம்பவ தினம் வீட்டில் எவரும் இருக்கவில்லை குடும்பத்தலைவர் நகரிலுள்ள வியாபார நிலையத்திற்கு பணிக்குச் சென்றுவிட்டார் குடும்பத்தலைவி அரச அலுவலகத்திற்குச் சென்றுவிட்டார் தனது மகனை சற்றுத் தொலைவிலுள்ள கணவரின் உறவினரிடம் விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

இதையடுத்து காலை 11மணியளவில் வீட்டிலிருந்து புகை மண்டலம் வெளியேறுவதைக் கண்ட அயலவர்கள் சற்றுத் தொலைவிலுள்ள உறவினர்களுக்குத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உறவினர் வீட்டிற்குச் சென்று அயலவர்களின் உதவியுடன் மின்சாரம் நிறுத்தப்பட்டு எரிந்துகொண்டிருந்ததைப் பொருட்கள் அணைக்கப்பட்டுள்ளது.

பொலிஸார், கிராம அலுவலகர், மின்சார சபையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை இன்று அதிகாலை மின்னொழுக்கு காரணமாக வவுனியா நகரிலுள்ள இலத்திரனியல் கடை ஒன்று எரிந்து பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.