36 இலட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் நேற்றிரவு 10.00 மணியளவில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தபோதே 300 கிராம் ‘ஐஸ்’ போதைப் பொருளை கடத்த முற்பட்டபோதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 52 வயதுடைய வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவரை இன்று நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

