பலத்த எதிர்பார்ப்புகளிற்கு மத்தியில் பொது நிகழ்வில் தோன்றினார் சந்திரிகா

18 0

மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்ததன் பின்னர் முதல்தடவையாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பொது நிகழ்வொன்றில் இன்று கலந்துகொண்டுள்ளார்.

கொழும்பில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாதுளவாவே சோபித தேரர் நினைவுநிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கலந்துகொண்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ரணில்விக்கிரமசிங்கவை ஆதரிக்க திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகிவரும் சூழ்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி சில வாரங்களிற்கு பின்னர் பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளார்.

பொதுவேட்பாளரிற்கான தேவையை தனியொருநபராக மக்கள் முன்கொண்டு சென்ற மாதுளவாவே சோபித தேரரின் நினைவு நிகழ்வில் சபாநாயகர் கருஜெயசூரியவும் கலந்துகொண்டுள்ளார்.

இதேவேளை தமிழ்தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவம் செய்யும்; வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் இந்த நிகழ்வில் கலந்துகொணடுள்ளார்.நல்லாட்சி அரசாங்கம் அமைவதிலும் பொதுவேட்பாளராக சிறிசேன நிறுத்தப்படுவதிலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க முக்கிய பங்களிப்பு வழங்கியிருந்தார்.

Related Post

தமிழர்களை மிரட்டிய இராணுவ அதிகாரி இடை நிறுத்தம்

Posted by - February 6, 2018 0
பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களை மிரட்டியதாகக் கூறப்படும் இலங்கை பிரிகேடியரை, அரசாங்கம் அவரது பணிகளில் இருந்து உடனடியாக தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. சுதந்திர தினத்தன்று…

காலியில் பெண் ஒருவர் துஷ்பிரயோகம் செய்து விட்டு மறைந்திருந்த நபர் கைது

Posted by - July 2, 2018 0
காலியில் பெண் ஒருவர் துஷ்பிரயோகம் செய்து விட்டு 10 ஆண்டுகளுக்கும் அதிக காலம் உருவத்தை மாற்றி மறைந்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டி சாரதியான இந்த…

சிறிலங்காவில், பொருத்தமான பெண் வேட்பாளர்களை தேடி அலையும் அரசியல் கட்சிகள்

Posted by - October 15, 2017 0
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களின் வேட்பாளர் பட்டியலில் 25 வீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், பிரதான அரசியல் கட்சிகள் பெண் வேட்பாளர்களைத் தேடி அலையத்…

கொழும்பு பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி

Posted by - September 15, 2018 0
காலி – கொழும்பு பிரதான வீதியின் வதுரேகம பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற ஜீப் வாகன விபத்தில் 36 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. சாரதிக்கு…

மக்கள் போராட்டம் வென்றது! காணிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை

Posted by - February 14, 2017 0
எமது காணிகளுக்குள், செல்ல அனுமதிக்கப்பட்ட பின்னரே நாங்கள் போராட்டத்தைகைவிடுவோம் என தற்போது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்கள்முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரனிடம் செவ்வாய்க்கிழமை (14)தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published.