இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்காவும் பிரிட்டனும் உள்விவகாரங்களில் தலையிடுகின்றன -வாசுதேவ

10 0

இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்காவும் பிரிட்டனும் தலையீடு செய்கின்றன என தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார  குற்றம்சாட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தின் அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் சபாநாயகர் கருஜெயசூரிய பாராளுமன்றத்தில் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்தமைக்கு வாசுதேவ நாணயக்கார கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் அமெரிக்க பிரிட்டன் தூதுவர்கள் உட்பட வெளிநாட்டு தூதுவர்களை சபாநாயகர் பாராளுமன்றத்தில் சந்தித்தமை குறித்து தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும் பிரிட்டனும் தங்களது தேர்தல் மற்றும் உள்விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகள் குறித்து குற்றம்சாட்டிவந்துள்ளன  என தெரிவித்துள்ள வாசுதேவ நாணயக்கார அவ்வாறன சூழ்நிலையில் எங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் அமெரிக்க பிரிட்டிஸ் தூதுவர்கள் தலையிடுவதை நீங்கள் எப்படி சகித்துக்கொள்கின்றீர்கள் என்பது புரியவில்லை என  வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

2015 இல்  அப்போதைய அரசாங்கத்தினை வீழ்த்துவதில்  மேற்குலகம்  பங்களிப்பு வழங்கியது வெளிப்படையான விடயம் எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

Related Post

மாணவனை அச்சுறுத்திய கல்லூரி அதிபருக்கு பிணை

Posted by - July 27, 2016 0
கொழும்பு நாலந்த கல்லூரியின் அதிபருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று குறித்த வழங்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில், அதிபர்…

மகா சிவராத்திரி உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் அனுட்டிப்பு

Posted by - February 25, 2017 0
மகா சிவராத்திரி விரதம் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் அனுட்டிக்கப்பட்டது. மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளில் மகா சிவ ராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது. சிவராத்திரி…

வத்தளை மதுபான விற்பனை நிலையத்தில் தீ

Posted by - January 16, 2018 0
வத்தளை, மாபோல பிரதேசத்தில் மதுபான விற்பனை நிலையமொன்றில் இன்று காலை திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயினால் குறித்த மதுபான விற்பனை நிலையம் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

துன்னாலை இளைஞன் சுட்டுக்கொலை: பொலிஸார் இருவரும் பிணையில் விடுவிப்பு

Posted by - December 5, 2017 0
வடமராட்சி துன்னாலைப் பகுதியில் இளைஞன் ஒருவரைச் சுட்டுக்கொன்றனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகிய இருவரையும் பிணையில் விடுவிக்க…

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியிடப்படும்.!

Posted by - December 27, 2017 0
இம்முறை நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் (2017) பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், www.doenets.lk என்ற இணையத்தளம் ஊடாக பெறுபேறுகளை…

Leave a comment

Your email address will not be published.