வௌிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற இந்தியர் கைது

139 0

ஒரு தொகை வௌிநாட்டு நாணயங்களை இலங்கைக்கு கடத்த முயன்ற இந்தியர் ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் நாட்டில் இருந்து சிங்கப்பூர் நோக்கி செல்ல இலங்கைக்கு வருகை தந்த நபரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் இன்று (02) அதிகாலை 1 மணி அளவில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 19,250 ஸ்டெர்லிங் பவுண்ஸ், 95,000 யூரோ, 71,500 சௌதி ரியால் மற்றும் 21,000 திராம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவற்றின் பெறுமதி சுமார் 27 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சுங்க அதிகாரிகள் 9 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தை கடத்த முயன்ற இலங்கையர் ஒருவரையும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் நாவலப்பிட்டிய பகுதியை சேர்ந்தவர் எனவும் அவர் இன்று (02) காலை 7.40 மணிஅளவில் டுபாயில் நோக்கி பயணிக்க இருந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment

Your email address will not be published.