மகிந்தவையும், சிறிசேனவையும் கைதுசெய்ய வேண்டும்- விக்ரமபாகு

5044 77

மைத்திரிபால சிறிசேனனவும், மஹிந்த ராஜபக்ஷவும் தொடர்ந்து சட்டத்துக்கும், அரசியலமைப்புக்கும் முரணான வகையில் செயற்படுவார்களாயின் அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

அத்துடன் நான் இன்று ஐக்கிய தேசிய கட்சியுடன் கரம் கோர்க்க காரணம் ஜனநாயகத்துக்கான போராட்டம் என்பதினாலேயே ஆகும். பாராளுமன்றத்துக்கும் அரசியலமைப்புக்கும் எதிராக செயற்படுபவர்களின் ஆட்சியை கவிழ்க்க பொது மக்கள் பாராளுமன்றை சுற்றிவளைத்து கைப்பற்ற வேண்டும் எனவும் தெரிவத்தார்.

ஐக்கிய தேசிய முன்னனியினர் இன்று அலரிமாளிகை வட்டாரத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

Leave a comment