ஐ.தே.க.யிலிருந்து 20 பேர் வருவது உறுதி, பொறுப்புடன் கூறுகின்றேன்- ஆனந்த அலுத்கமகே

6805 130

மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக்கி அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 20 பேர் விரைவில் இணைந்து கொள்ளவுள்ளதாக வனப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆனந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு மன்றக் கல்லூரியில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாம் தற்பொழுது அந்த 20 பேருடனும் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் மிகவும் பொறுப்புடன் இந்தக் கருத்தைக் கூறுகின்றேன். தற்பொழுதும் தனது வாகனத்தில் அவ்வாறு வெளியேறவுள்ள ஒருவர் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment