தமிழ் மக்கள் பேரவையிலிருந்து புளொட்டும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியும் நீக்கப்பட வேண்டும்-கஜேந்திரகுமார்(காணொளி)

290 0

தமிழ் மக்கள் பேரவையிலிருந்து புளொட்டும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியும் நீக்கப்பட வேண்டும் என, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகித்துக்கொண்டுள்ள புளொட் அமைப்பின் த.சித்தார்த்தன், தமிழ் மக்கள் பேரவை புதிய அரசியல் யாப்புத் தொடர்பான வரைவொன்றைத் தயாரித்தபோது, அதில் அங்கம் வகித்துவிட்டு பின்னர் பாராளுமன்றம் அரசியலமைப்புப் பேரவையாக மாற்றப்பட்டு குழுக்கள் அமைக்கப்பட்டபோது, குழுவொன்றின் தலைவராக இருந்து கடமையாற்றியுள்ளார்.

எனவே நிலையான கொள்கை இல்லாத இவரை, தமிழ் மக்கள் பேரவையிலிருந்து நீக்க வேண்டும் என, அதன் தலைவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று திடமான கொள்கை இல்லாத ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியினரும் தமிழ் மக்கள் பேரவையிலிருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தனது கட்சியில் ஈ.பி.ஆர்.எல்.எப் கூட்டு அங்கமாக இருக்க மாட்டாது என, எழுத்துமூல உத்தரவாதம் தந்தால் மாத்திரம் அவருடன் இணைந்து பயணிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Leave a comment