கடந்த 26ம் திகதி மத்தேகொட பிரதேசத்தில் உள்ள அரச வங்கியில் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவத்தில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
கல்கிஸ்ஸ் விஷேட பொலிஸ் குழு நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
34 வயதுடைய டிலான் லலிந்த சந்தருவன் என்ற பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், சம்பத் இந்திக குமார என்ற பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய மற்றும் செல்வராஜா பிருபுமூர்த்து என்ற பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் வங்கியின் சிசிடிவி கெமரா கட்டமைப்பை களனி கங்கையில் வீசுவதற்கு உதவிய குற்றச்சாட்டில் சமிந்த சம்பத் குமார என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் ஒருவரின் வீட்டு முற்றத்தில் புதைக்கப்பட்டிருந்த 90 இலட்சம் ரூபா பணமும் 493 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை களனி கங்கையில் வீசப்பட்ட வங்கியின் சிசிடிவி கட்டமைப்பை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

