உடனடியாக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும்-ஐரோப்பிய ஒன்றியம்

356 0

இலங்கையில் திடீரென ஏற்பட்டுள்ள அரசியல் நிலையற்றதன்மை மற்றும் அமைதியின்மை காரணமாக நாடு ஆபத்தை எதிர்நோக்கயுள்ளது என  கூறுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் இதனைக் கூறியுள்ளது.

நாட்டின் அரசியலமைப்பை மதிக்கும் ஒரு தீர்வை விரைவாக பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை இலங்கையின் உள்ளக அரசியல் நடவடிக்கைகளில் சீனா தலையீடு செய்வதில்லை என்று சீன வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறியுள்ளார்.

இலங்கையின் அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சினையை தீர்த்துக் கொள்ளும் என்று சீனா எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

Leave a comment