மீண்டும் இனத்துரோகத்தை உறுதி செய்த டக்ளஸ் தேவானந்தா!!!(காணொளி)

23 0

நாட்டில் ஏற்பட்டு அரசியல் குழப்பநிலையை அடுத்து, இன்று புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது.

குறித்த அமைச்சரவையில் 12 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், 1 பிரதி அமைச்சர், 1 இராஜாங்க அமைச்சர் என மொத்தமாக 14 அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில், நாட்டின் பாதுகாப்பு அமைச்சரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால முன்னிலையில், மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகார அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் யாழ்ப்பாணத நகரப் பகுதி மற்றும் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஆதரவான பகுதிகளில் அவர் அமைச்சராப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதையடுத்து, வாண வேடிக்கைகள், பட்டாசுகள் கொழுத்தி அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளானதையும் அவதானிக்க முடிந்தது.

கடந்த 2009ஆம் ஆண்டில் தமிழ் இனப்படுகொலையை முன்னின்று நடாத்திய அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு, டக்ளஸ் தேவானந்தா ஒட்டுக்குழுவாக செயற்பட்டு வந்த நிலையில், தற்போது மஹிந்த ராஜபக்ச பிரதமராகியுள்ளதையடுத்து, தொடர்ந்தும் அவருக்கு ஆதரவு வழங்கி மீண்டும் தமிழ் இனத்துரோகி என்பதை உறுதி செய்துள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Related Post

பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டின் பிரதான சந்தேக நபர் கைது

Posted by - June 16, 2017 0
பிலியந்தலை பிரதேசத்தில் காவற்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் சிலரின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

அர்ஜூன் அலோசியஸிடம் இன்றும் விசாரணை

Posted by - September 10, 2017 0
பெர்பெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜூன் அலோசியஸ் இன்று மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். தற்போது அவரிடம் ஆணைக்குழுவில் உள்ள…

நம்பிக்கையில்லா பிரேரனைக்கு சுதந்திர கட்சியின் 96 உறுப்பினர்களும் ஆதரவு

Posted by - August 6, 2017 0
பாராளுமன்றத்தில் முன்னாள் நிதி அமைச்சரும், தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 96 உறுப்பினர்களும்…

பதவி விலகினார் ஆறுமுகன் தொண்டமான்

Posted by - August 30, 2018 0
இலங்கை தொழிலளார் காங்கிரஸின் நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஒன்றுகூடல் கொழும்பில் உள்ள இ.தொ.கா தலைமையகத்தில் இன்று இடம்பெற்றது. காங்கிரஸின் பொது செயலாளரும், தலைவருமான ஆறுமுகன்…

மன்னார் புதைகுழி அகழ்வில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும்….

Posted by - July 21, 2018 0
மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் இருந்தமையினால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.சட்ட மருத்துவ அதிகாரி டி.சமிந்த ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.…

Leave a comment

Your email address will not be published.