நாட்டில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் கருத்து வெளியிட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் (காணொளி)

481 0

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில், தமிழ்த் தரப்புக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் தரப்பிற்கே, தமிழ்ப் பிரதிநிதிகள் ஆதரவு வழங்க வேண்டும் என, ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில், யாழ்ப்பாணத்தில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு, ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சனைகளை தமிழ்த் தரப்புகள் முன்வைக்கும் வேண்டும்.

அதனை நிறைவேற்ற மகிந்த ராஐபக்கவோ, ரணில் விக்கிரமசிங்கவோ சம்மதம் தெரிவுக்கின்றனரா என்று பார்க்க வேண்டும்.

அதன் பின்னர் எமது கோரிக்கைகளுக்கு ஆதரவு அல்லது சம்மதம் கிடைக்காதவிடத்து, யாருக்கும் ஆதரவளித்து பிரயோசனமற்றதால் நடுநிலை வகிப்பது சிறந்தது.

அத்தகையதொரு முடிவுகளையே நாங்களும் எடுப்போம். அதனையே கூட்டமைப்பினரும் எடுக்க வேண்டும். என கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a comment