சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று கண்டிக்கு விஜயம் மேற்கொண்டு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்துள்ளார்.
இதன்போது நாட்டில் தற்போது நிலவும் அரசியல் குழப்ப நிலைமையை சுமுகமான நிலைமைக்கு கொண்டுவருவதற்கு மகாநாயக்க தேரர்கள் சரியான முறையில் வழிகாட்ட வேண்டும் என சபாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வரலாற்றில் இது போன்ற சந்தர்ப்பங்களில் மகாநாயக்க தேரர்கள் முன்னின்று பிரச்சனைகளை சுமுகமாக தீர்த்துள்ளதாகவும் தற்போதைய நிலவரத்தினை சண்டைகள் மூலம் தீர்க்க முடியாது எனவும் அதற்கு சரியான இடம் பாராளுமன்றம் எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வேளையில் ஒருவருக்காகவோ அல்லது ஒரு குழுவினருக்காகவோ முன்னிற்பதற்கு தனக்கு அவசியமில்லை எனவும் நாட்டினதும் பொதுமக்களினதும் நலனுக்காக பாராளுமன்றத்தில் அமைதியான முறையில் பிரச்சினையை தீர்ப்பதற்கு தான் முழுமையாக ஒத்துழைப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டின் தற்போதைய நிலைமையினால் நாடு சர்வதேச ரீதியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் எனவும் பிரச்சினை மேலும் வலுப்பெறாதிருக்க பாராளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மை உள்ளவர்களுக்கு பதவியை வழங்கி ஜனநாயகத்தை மதிக்குமாறு அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய மகாநாயக்க தேரர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

